அரியலூர் அருகே 3 ஆண்டாக கூட்டு குடிநீர் ஏற்றாத நீர்த்தேக்க தொட்டி சமத்துவபுர மக்கள் அவதி

அரியலூர், பிப்.15: அரியலூர் மாவட்டம், வாரணாவாசியில் சமத்துவபுரத்தில் சுமார் 3 வருடமாக மக்களுக்கு கொள்ளிட கூட்டு குடிநீரை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றாமல் இருப்பதால் கொள்ளிட கூட்டு நீர் கிடைக்காமல் சமத்துவபுர மக்கள் அவதியுறுகின்றனர்.
 வாரணாவாசி சமத்துவபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  இவ் வழியே கொள்ளிட கூட்டு குடிநீர் அரியலூர் மற்றும் மற்ற ஊர்களுக்கு குழாய் வழியே  தண்ணீர் செல்கிறது. ஆனால், சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொள்ளிட கூட்டு குடிநீர் இணைப்பை மக்கள் பயன்பாட்டிற்கு  தொட்டியில் ஏற்றாமல் 3 வருடங்களாக ஆழ்துளை கிணறுகளிலும் வரும் உப்பு நீரை பருகின்றனர். இது குறித்து டேங்க் ஆப்ரேட்டரிடம் கேட்டதற்கு  கொள்ளிட கூட்டு குடிநீர் இணைப்பிற்கு வாரணவாசி பஞ்சாயத்திலிருந்து சரிவர குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தால் கொள்ளிட கூட்டுகுடிநீர் இணைப்பை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ஆழ்துளை கிணறுகளிலிருந்து கிடைக்கும் உப்பு நீரை பருகுவதால்  மக்களுக்கு சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீராக கோளாறுகள் அடிக்கடி ஏற்ப்பட்டு  அவதியுறுகின்றனர். இதனை சரி செய்ய வேண்டி பல முறை சமத்துவபுர மக்கள்  மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாகவும், ஆனால் எவ்வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை என சமத்துவபுர மக்கள் குற்றம்சாட்டுகினறனர்.  
 தற்போது கோடைகாலம் நெருங்குவதால் தண்ணீர் பிரச்னை பெரிதும் பாதிக்கும். அதனால்  மாவட்ட நிர்வாகம் சமத்துவபுர மக்களுக்கு கொள்ளிட கூட்டுகுடிநீர் இணைப்பை பெற்று தர வேண்டும் என்றும், மேலும் தற்போது  உள்ள ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மூலம் மட்டுமே தண்ணீர் பயன்படுத்துகின்றனர். இதனால் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். அதானல் மாவட்ட நிர்வாகம் மேலும் ஒரு அழ்துளை கிணற்றை அமைத்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

× RELATED அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து