×

கீழப்பழுர் அருகே பஸ்சின் மேற்கூரையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் அதிகாரிகள் மெத்தனம்

அரியலூர், பிப்.15: கீழப்பழுர் அருகே பஸ்சின் மேற்கூரையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே அரசு பாலிடெக்னிக் அமைந்துள்ளது. இப்பாலிடெக்னிக்கில் வெளி ஊரை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் வழக்கமாக  வட்டார போக்குவரத்து அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில்  தங்கள் ஊருக்கு திரும்பி செல்வதற்காக பேருந்தில் ஏறி பயணம் செல்வர்.  
இந்நிலையில் நேற்று  அரசு பேருந்தில்  ஒன்றில் படிக்கட்டுகளில் தொங்கிய நிலையிலும், பின்புறம் உள்ள ஏணியில் ஏறி நின்றும் ஆபத்தான சூழலில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். மாணவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏறப்படுத்தும் இத்தகைய நிலையை அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனரும் எவ்வாறு இதனை அனுமதிக்கின்றனர் என்று தெரியவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
வட்டார போக்குவரத்து   அலுவலகம்   எதிரிலேயே இதுபோன்ற சம்பவம் நடந்தும் அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்ள வில்லை. எனவே அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : underground ,college students ,travel officers ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...