தன்னார்வலர்களால் பொலிவு பெற்ற சோழன்குடிக்காடு அரசு பள்ளி

செந்துறை, பிப். 15: செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக கடந்தாண்டு கிராம மக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது பள்ளியில் கட்டிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து தன்னார்வலர்களிடம் பள்ளியின் கட்டிடங்களை பழுதுநீக்கி இதர வசதிகளை செய்து கொடுக்குமாறு தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கேட்டுக்கொண்டனர். இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை தன்னார்வலர்கள் செய்து கொடுத்தனர். இதனால் அரசு புதுப்பொலிவு பெற்று வருகிறது.

× RELATED பொய் கருத்து கணிப்பால் மனம் தளர...