×

ஏட்டுவின் மனிதாபிமானம் சாலையில் தவறவிட்ட ரொக்க பணம், ஏடிஎம் கார்டு இளைஞரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர், பிப்.15:  பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் ஜெயகுமார் (42). இவரது சொந்தஊர் அரியலூர் மாவட்டம், கோவில் எசனை கிராமமாகும். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளார். இவர் கடந்த 11ம்தேதி பணியை முடித்து இரவு 9 மணியளவில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சில ஏடிஎம் கார்டுகள்ஆயிரக்கணக்கில் பணம் சிதறிக் கிடந்தது. அதோடு ஆதார்கார்டு, பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், விசிட்டிங் கார்டுகளும் அதில் இருந்துள்ளன.
பிறகு சாலையோரம் பைக்கினை நிறுத்தி ஆதார் கார்டிலும், விசிட்டிங் கார்டிலும் இருந்த ஒரே போட்டோவிலிருந்தவருக்கு விசிட்டிங் கார்டிலிருந்த நம்பரைக் கொண்டு கால்செய்து பேசினார். அதில் துறைமங்கலத்தை சேர்ந்த பிரேம்குமார் (36) என்ற இளைஞர் லெப்பைக்குடிகாட்டிற்கு பைக்கில் சென்றபோது பர்சைத் தொலைத்ததை உறுதிப்படுத்தினார். பின்னர் அவரை நேரில் அழைத்து தவறவிட்ட பர்சோடு, அதில் சாலையோரம் பொறுக்கி யெடுத்துக் கிடைத்த ரூ4,530 ரொக்கப்பணம், 5ஏடிஎம் கார்டுகள், ரேசன்கார்டு, பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒப்படைத்தார். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட சமூக வளைதலங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வைரலாகப் பரவி வருகிறது. இதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு தலைமைக் காவலர் ஜெயகுமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி