அசாவீரன்குடிக்காட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

செந்துறை, பிப். 15: செந்துறை அருகில் உள்ள அசாவீரன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. மன்ற தலைவர் அமீனா கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் மதலைராசு, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் சிலையை ஜெயங்கொண்டம் உலக திருக்குறள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். சிவஞானம் கல்வி அறக்கட்டளை தலைவர் குமார், மன்ற கொடியை ஏற்றி வைத்தார்.

× RELATED பேராசிரியர் மு.பி.பா. நூலக திறப்பு விழா