×

கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு நீதிமன்றம் உத்தரவு

கந்தர்வகோட்டை,  பிப்.15:கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  சங்கத்தின் தேர்தல் 11 உறுப்பினர்களுக்கு வரும் 18ந்தேதி தேர்தல்  நடத்தப் படுவ தாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக 11 பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதில் நல்லையன்  என்பவர் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதை கண்டி த்து எதிர்த்து  போட்டியிட முயன்றவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
இதில் 1.2.19 அன்று  வழங்கப்பட்ட தடை ஆணைப்படி மட்டங்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தின் தேர்தல் நடவடிக்கைகள் தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலரால் அறிவிப்பாணை சங்க கட்டிடம் முன்பாக சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Coalition Union ,court ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...