×

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் போராட்டத்தில் பங்கேற்ற 7 ஆசிரியர்கள் நிபந்தனையுடன் மீண்டும் பணியில் சேர்ப்பு

கந்தர்வகோட்டை, பிப்.15:  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்திலிருந்து விடுவிக்க கடைசி ஆயுதமாக காலிபணியிடமாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தில்
பலர் தீவிரமாக இருந்தனர்.
இந்நிலையில் சில ஆசிரி யைகளிடம் தங்கள் பணி பறிக்கப்படும். அனைவரும் வேலைக்கு சென்று விடுங்கள் என அரசு தரப்பில் மறைமுகமாக பிரச்சாரம் மேற்கொண்டதில் போராட்டம் தடுமாறி போனது. போராட்டத்தில் தீவிரமாக இருந்த ஆசிரியர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மணிகண்டன், கோவிந்தராஜ், அரியாணிபட்டியை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், ஜெயக் குமார், பிச்சை , சக்திவேல் ஆகியோர் பணியிடங்கள் காலிபணியிடங்களாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜாக்டோ - ஜியோவினரின் கோரிக்கையை ஏற்று அரசு நிபந்தனை யுடன் மீண்டும் பணியாற்ற ஆணை பிறப்பித்துள்ளது. நேற்று வழக்கம்போல் ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 267 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பணி மாறுதல் ஆணை பிறபிக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் 17(பி) மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கந்தர்வகோட்டை வட்டார கல்வி அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து முதன்மை மாவ ட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...