திருச்சி அதிமுக எம்பி காணவில்லை திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் குற்றச்சாட்டு

கறம்பக்குடி,பிப்.15: திருச்சி அதிமுக எம்பி காணவில்லை என திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் குற்றச்சாட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பொண்ணன்விடுதி , பட்டதிக்காடு, கருவடதெரு , வானக்கங்காடு , கணக்கங் காடு உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தவபாஞ்சாலன் தலைமை வகித்தார்.  
திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித் தார். மேலிட பார்வையாளர் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பெரும்பாலானோர் சாலை வசதி ,பேருந்து வசதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். மேலும் வாணக்கங்காடு கிராமபொதுமக்கள் திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் குமாரையே காணவில்லை என்று கூறினர்  கூட்டத்தில் திமுக ஊராட்சி செயலாளர்கள் , நிர்வாகிகள் , பொதுமக்கள் , பெண்கள் கலந்து கொண்டனர்.

× RELATED நாகை எம்பி, திருவாரூர் எம்எல்ஏ தொகுதி...