காங்கிரஸ் பூத்கமிட்டி ஆலோசனை

பொன்னமராவதி,பிப்.15: பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பூத்கமிட்டி ஆலோசனை மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை  தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் செல்வராஜன்  தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  மணிகண்டன், சுப்பையா ஆகியோர் முன்னிலை  வகித்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும்  இனைப்பது தொடர் பாகவும், 2019 பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி  உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில்  வட்டார துணைத் தலைவர் வைத்தியநாதன், பொருளாளர் ராஜேந் திரன், முன்னாள்  ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED போலி கருத்துக்கணிப்பு முடிவுகளால்...