அரசு பள்ளியில் சத்துணவு தரமாக வழங்கப்படுகிறதா? நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை,பிப்.15: புதுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியிலேயே சத்துணவு தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துண வின் தரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் சத்துணவு சாப்பிட்டு பார்த்தார்.
பின்னர் மாணவ, மாணவிகளிடம் ஒவ்வொரு நாளும் சத்துணவு வழங்கப் படுகி றதா? என கேட்டறிந்தார். பின்னர் சத்துணவு மையத்தின் பதிவேடுகளை பார் வையிட்டு, சத்துணவு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

× RELATED வேம்பார் அரசு பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு