ரங்கநாதர் கோயிலில் ராகுகேது பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருமயம்,பிப்.15: திருமயம் அருகே உள்ள நாகநாதர் கோயிலில் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை  மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூர் நாகநாத சுவாமி திருக்கோயிலில்  ராகு ,கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. விழாவில்  நாக நாதர், பிரஹதாம்பாளுக்கும் அதிகாலை தொடங்கி சிறப்பு அபிஷேக ,ஆராத னைகள்  செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து செவ்வாய் தோஷம்,பித்ரு ,நாக தோஷ உள்ளவர்கள்   கல் நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். மேலும் பிள்ளை பேறு வேண்டி  ஏராளமான தம்பதிகள் அதிகாலை கோவிலுக்கு வந்து கோயில் முன்புள்ள குளத் தில்  நீராடி ஈரத்துணியுடன் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் தங்கள்  நட்சத் திரங்களை கூறி அர்ச்சனை செய்தனர்.  
இக்கோயிலுக்கு வந்து  பிள்ளைப்பேறு பெற்றவர்கள் தங்கள் குழந்தையை கரும்புத் தொட்டிலில் தூக்கி  வந்தும் ,குழந்தையின் வயிற்றில் மாவிளக்கு ஏற்றியும் தங்கள் நேர்த்திக்கடனை  ( பிரார்த்தனைகளை) நிறைவேற்றினர். அன்ன தானம் செய்ய ப்பட்டது. விழாவுக்கான  ஏற்பாடுகளை புதுக்கோட்டை திருக்கோயில்கள் நிர்வாக அலுவலர்கள் மற்றும்  பேரையூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

× RELATED மேலூரில் பரபரப்பு சோழவந்தான் அருகே பக்தர்கள் கத்தி போடும் விழா