தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் பேரூராட்சி பணியாளர்கள் அதிரடி

ஆலங்குடி,பிப்.15: தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்களை பேரூராட்சி பணியாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
ஆலங்குடி பேரூராட்சிகுட்பட்ட கடைவீதி, சந்தைப்பேட்டை, அரசமரம், உள் கடைவீதி உட்பட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொ ருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்தப்பட்டு வருவதாக பேரூராட்சி செயல் அலுவலருக்கு சமூக ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய செயல் அலுவலர் கணேசன் உத்தரவிட்டார்.  இதனைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சி பணியாளர்கள், கடை களில் பயன்பாட்டுக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

× RELATED தடை உத்தரவை மீறி ஊருக்குள் நுழைந்த ரவுடி ைகது