தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுக்கோட்டை,பிப்.15:  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக புதுக்கோட்டை மண்டல மேலாளர் குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், புதுக்கோட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல்  பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிட ங்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு பட்டியல் எழுத்தர்: பி.எஸ்சி (அறிவியல்),  உதவுபவர்: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, காவலர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயது, பிற்படுத்தப் பட் டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது மற்றும் பொது வகுப்பினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள், பட்டியல் எழுத்தர் 35 பணியிடங்கள், உதவுபவர் 59 பணியிடங்கள் மற்றும்
காவலர் 26 பணியிடங்கள். தகுதியுடைய ஆண்களிட மிருந்து மட்டும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, புதுக்கோட்டை மண்டலம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ,தபால் மூலமா கவோ சுய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 20ந்தேதி மாலை 5 மணி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

× RELATED விண்ணப்பங்கள் வரவேற்பு