×

பேராம்பூர் ஏரியில் இருந்துதண்ணீர் வெளியேறும் மதகுகள் இடிந்து சேதம் விவசாயத்திற்குநீர் சேமிக்க முடியாத நிலை

புதுக்கோட்டை,பிப்.15: பேராம்பூர் பெரிய ஏரியில் தண்ணீர் வெளியேறும் சட்ட ர்கள் உடைந்து சேதமடைந்து கிடப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அடித்து செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாட்டம் பேராம்பூர் ஏரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. சுமார் 25ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் மழைக் காலங்களில் தண்ணீர் பெருகினால் கடல்போல் காட்சியளிக்கும். இந்த ஏரியை நம்பி சுமார் 1,500ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். ஒரு முறை தண்ணீர் பெருகி விட்டால் அந்த ஆண்டின் மூன்று பேவங்களும் விளைச்சலுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி விவசாயிகள் பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் மீன்பிடி தொழிலும் களைகட்டும். இந்த ஏரிக்கு பல காட்டாறுகள் மற்றும் கட்டகுடி, திருநல்லுார், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவாட்டர பகதிகளில் உள்ள சிறியது முதல் பெரியது என நுாற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறும் போது அனைத்து தண்ணீரும் பேரம்பூர் ஏரியை வந்தடை யும்.
பேராம்பூர் ஏரி நிரம்ப தொடங்கும். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்குவார்கள். ஏரி நிரம்பிய பிறகும் மழை பொழிவு இருந்தால் ஏரிக்கு மேற்கு பகுதியில் உள்ள ஆருண் சட்டர்கள் திறந்து வெளியேறும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகளின் மேற்பார்வை யில் கண்காணிப்பார்கள்.

இதனால் எப்போது பேராம்பூர் ஏரியின் மூன்று ஆறு கண் சட்டர்களை அதிகாரி கள் ஒவ்வொரு ஆண்டும் மராமத்து பணிகள் மேற்கொண்டு அதனை பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் ஏரி நிரம்பவில்லை. இதனால் அந்த சட்டர் வழியாக தண்ணீர் வெளியேறியது நின்று விட்டது. மேலும் அதிகாரிகள் அந்த சட்டரை பராமரிப்பு பணியையும் மேற்கொள்ள வில்லை. இதனால் சட்டரின் உள்பகுதியில் அனைத்து சிமிண்டு பூச்சுகளும் பெயர்ந்து விழத்தொடங்கியுள்ளது. இரும்பு சட்டர்கள் அனைத்தும் துருப்பிடித்து கொட்டி வருகிறது. அரளைகல் கட்டிடங்கள் மட்டும் தொடுக்கிக் கொண்டு இருந்து வருகிறது. மழை வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பில் மதகுகள் வெள்ளத்தால் அடி த்து செல்லப்பட்டது போல் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. வௌத்தால் பேராம்பூர் பாலம் அடித்து செல்லப்பட்டால் அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

மேலும் இந்த பகுதியில் உள்ள அனைத்து நிலங்களும் அடையாளம் தெரியாமல் மண் நிரம்பி ஒரு நிலப்பரப்பாக மாறி விடும். பின்னர் ஒரு ஏக்கரில் கூட விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதனால் அதிகாரிகள் விரைந்து அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தி உடைந்து கிடக்கும் மதகு களை விரைந்து சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

முக்கொம்பு நிலை
கடந்த சிலஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தில் தண்ணீரும் பெருக வில்லை. மதுகுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவும் இல்லை.இதனால் தற்போது மகுகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்து காணப் படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.இந்நிலை யில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைந்து வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதுபோல்
நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மராமத்து பணிகள்
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய ஏரிகளில் பேராம்பூர் ஏரி உள்ளது. நல்லமழை பெய்து தண்ணீர் பெருகினால் விவசாயிகள் தண்ணீர் பிரச்னையின்றி ஒரு ஆண்டு முழுவதும் நேரடி பாசனத்தின் மூலம் பயனைடை வார்கள். இதனால் விவசாயிகள் அதிக மகசூல் அடைந்தனர். அதிக அளவு தண்ணீர் பெருகினாலும் ஏரியின் மேற்குகரை பகுதியில் உள்ள ஆறுகண் மதகு கள் வழியாக திறந்து விடுவார்கள். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் குறைந்தவுடன் மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.

Tags : lake ,lagoon ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு