சாலை பாதுகாப்பு வாரவிழா

பாபநாசம், பிப். 15: பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடந்தது. பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் பேசுகையில், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. செல்போன் பேசியவாறு வாகனம் இயக்கக்கூடாது. வாகனம் ஓட்டும்போது விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார். பள்ளி தலைமையாசிரியர் தீபக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

× RELATED சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு துண்டு பிரசும்