புயலில் சேதமடைந்து கரை ஒதுங்கிய விசைப்படகில் தீ

சேதுபாவாசத்திரம், பிப். 15: புயலில் சேதமடைந்து கரை ஒதுங்கி கிடந்த விசைப்படகு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

கஜா புயலின் கோரதாண்டவத்தால் சேதுபாவாசத்திரம் கடற்கரையில் நிறுத்தியிருந்த விசைப்படகுகள் சேதமடைந்தது. இந்நிலையில் சேதுபாவாசத்திரம் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான படகு புயலில் சேதமடைந்து மனோரா அருகே கரை ஒதுங்கி கிடந்தது. இந்நிலையில் இந்த படகு நேற்று மாலை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். அதற்குள் விசைப்படகு முழுவதும் எரிந்து சாம்பலானது. கடலோர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Advertising
Advertising

சாக்கோட்டை துணை மின் நிலைய பகுதி: கும்பகோணம் நகர், நாச்சியார்கோவில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, திருக்கருக்காவூர், வலங்கைமான், ஆலங்குடி, பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

பட்டுக்கோட்டை துணை மின் நிலைய பகுதி: பட்டுக்கோட்டை நகரம் 1, நகரம் 2, பண்ணவயல், குடிநீர், சூரப்பள்ளம், சூராங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Related Stories: