தஞ்சாவூர் போலீஸ் சரகத்தில் தஞ்சாவூர் போலீஸ் சரகத்தில் 146 எஸ்ஐக்கள் கூண்டோடு இடமாற்றம்

தஞ்சை, பிப். 15: தஞ்சாவூர் போலீஸ் சரகத்தில் 146 சப் இன்ஸ்பெக்டர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து டிஐஜி லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை போலீஸ் சரகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளது. இதில் சட்ட ஒழுங்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் 146 பேரை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றிய 72 சப்இன்பெக்டர்களில் 47 பேர் நாகப்பட்டினத்துக்கும், 24 பேர் திருவாரூருக்கும், ஒருவர் தஞ்சை எஸ்பி தனிப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றிய 29 பேர் தஞ்சைக்கும், நாகை மாவட்டத்தில் பணியாற்றிய 45 பேரில் 5 பேர் திருவாரூருக்கும், 40 பேர் தஞ்சைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: