கள்ளக்காதல் விவகாரம் புகாரை முறையாக விசாரிக்காத ஒரத்தநாடு எஸ்எஸ்ஐ இடமாற்றம்

ஒரத்தநாடு, பிப். 15: கள்ளக்காதல் விவகாரத்தில் புகாரை முறையாக விசாரிக்காத எஸ்எஸ்ஐயை இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.

தஞ்ைச மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். கோயில் பூசாரி. இவரது மனைவி நாகம்மாள். அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் மாரிமுத்து (33). நாகம்மாளுக்கும், மாரிமுத்துவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கடந்த 7ம் தேதி இருவரும் உல்லாசமாக இருந்ததை ஆறுமுகம் நேரில் பார்த்து விட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த ஆறுமுகம், ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Advertising
Advertising

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரத்தநாடு எஸ்எஸ்ஐ சீனிவாசராகவனிடம் (50) நாகம்மாள் புகார் செய்தார். அதில் தனது புடவையை உருவி மாரிமுத்து மானபங்கப்படுத்தினார். இதை பார்த்து தடுக்க வந்த எனது கணவர் ஆறுமுகத்தை மாரிமுத்து தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சீனிவாசராகவன் இந்த புகார் குறித்து ஆறுமுகம், மாரிமுத்துவிடம் விசாரிக்கவில்லை.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் மாரிமுத்து பாதிக்கப்பட்டார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி இறந்தார். இதுகுறித்து மர்ம மரணம் என வழக்குப்பதிந்து ஒரத்தநாடு போலீசார் விசாரித்–்து வருகின்றனர். நாகம்மாள் ஏற்கனவே அளித்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி இருந்தால், மாரிமுத்து இறந்திருக்க மாட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் எஸ்எஸ்ஐ சீனிவாசராகவனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: