ரேஷன் குறைதீர் முகாம்

பாபநாசம், பிப். 15: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை அடுத்த புளியக்குடியில் ரேஷன் குறைதீர் முகாம் நடந்தது. பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலகத்தை சேர்ந்த ஹெட் கிளார்க் வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பயனாளிகளிடம் இருந்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் தொடர்பான 8 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

× RELATED ரசாயன உரங்களுக்கு புதிய விற்பனை விலை அறிவிப்பு