×

மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து 23ம் தேதி பேரணி

பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் முடிவு
தஞ்சை, பிப். 15: தஞ்சையில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் நிறுவன தலைவர் லெனின் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஹைட்ரோ கார்பன், பாதுகாக்கப்பட்ட பெட்ரோ ரசாயன மண்டலம், சாகர் மாலா, அனல் மின் நிலையங்கள், கூடங்குளம் அணு உலைகள், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, ராணுவ தளவாட தொழிற்சாலைகள் என தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கும் படுபாதக திட்டங்களை கைவிட வேண்டும். காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

கெயில் குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும். உயர்மின் கோபுர கம்பிகளை புதைவட கம்பிகள் மூலம் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் வரும் 23ம் தேதி பேரணி நடக்கிறது. இதைதொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும்.
எனவே தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ள அனைத்து இயக்கங்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறவுள்ள இப்பேரணி மத்திய, மாநில அரசுகள், அரசியல் இயக்கங்கள், தமிழ் மக்களை திரும்பி பார்க்க வைக்கும். இவ்வாறு லெனின் கூறினார்.

Tags : protest rallies ,
× RELATED தக்கலையில் மேம்பாலம் அமைவதை கண்டித்து பேரணி- ஆர்ப்பாட்டம்