மொடக்குறிச்சியில் தாலுகா மருத்துவமனை

மொடக்குறிச்சி, பிப்.15:மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக விரைவில் தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபை கூட்டத் தொடரில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., சிவசுப்ரமணி நேற்று பேசியபோது மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியங்கள் தனி, தனி தாலுகாவாக மாற்றப்பட்டுள்ளது.
Advertising
Advertising

கொடுமுடியில் தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

அதேபோல், மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்து பேசிய, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாலுகாவாக அறிவிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் தாலுகா மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக விரைவில் தரம் உயர்த்தப்படும் என்றார்.

Related Stories: