மாடியில் தூங்கியவரின் வீட்டில் நகை திருட்டு

திருப்பூர், பிப்.15: திருப்பூரை  அடுத்த ராஜாஜி நகர், காட்டன்மில்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்  (28). இவர், நேற்று முன்தினம் இரவு, காற்று வசதிக்காக குடும்பத்தினருடன்  வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
காலையில் கீழே வந்த   போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் இருந்த  பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைத்திருந்த 3 பவுன்
நகை, மொபைல் போன்  திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

× RELATED வீடு புகுந்து நகை திருட்டு