கோபியில் தொடர் கொள்ளை: மக்கள் பீதி

கோபி, பிப்.15: கோபி மற்றும் அதைச் சுற்றி உள்ள கவுந்தப்பாடி, அளுக்குளி, கடத்தூர், பெருந்தலையூர், நஞ்சப்பாநகர், டெலிபோன் நகர், சிறுவலூர், அழகு கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக 10க்கும்  மேற்பட்ட இடங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது.

இதில், ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனியார் நிறுவனங்களின் உதவியுடன் 687 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  ஆனால், இதையும் மீறி கடந்த வாரம் நஞ்சப்பா நகரில் பள்ளி தலைமையாசிரியர் வீட்டில் கொள்ளை, அளுக்குளியில் இரும்பு கடை உரிமையாளரிடம் நகை பறிப்பு, பெருந்தலையூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்தது.
Advertising
Advertising

இந்த வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் அவர்களை பிடிப்பது போலீசுக்கு சவாலாக உள்ளது.   தேர்தல் நெருங்குவதால் பணி மாறுதலுக்காக காத்திருக்கும் போலீசாரும் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `கடந்த ஒரு மாதத்தில் நடந்த கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு, ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தாலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்துவர்.  ஆனால், அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவம் நடந்த பிறகும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

Related Stories: