வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருப்பூர், பிப்.15: திருப்பூரில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
 திருப்பூர் மாவட்டத்தில்  உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை  கையாளுதல் குறித்து முதன்மை பயிற்சியாளர்களுக்கு ஏற்கனவே செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,  வாக்குப்பதிவு தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள்  குறித்து முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.ஒரு  சட்டமன்ற தொகுதிக்கு 5 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தலைமையில்  கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள் துவக்கி வைத்தார். இதில்,  தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் உட்பட  பலர் பங்கேற்றனர்.

× RELATED உத்திரபிரதேசத்தில் வாக்குச்சாவடி...