விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

திருப்பூர், பிப்.15: இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் இணைந்து கட்டிய நவசக்தி விநாயகர் கோயிலின் கும்பாபிஷேக விழா வருகிற 18ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் நவசக்தி விநயாகர் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களால் கட்டப்பட்டது. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரும் ஒற்றுமையுடன், ஆண்டுதோறும் விழாக்களை சிறப்பாக நடத்தி, அன்னதானம் வழங்கி வருகின்றனர். இங்கு வருகிற 18ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, வருகிற 17ம் தேதி காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, மகாலட்சுமி ஹோமம், கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி பூஜை, நில தேவர் பூஜை, காப்பு கட்டுதல், கும்ப அலங்கார மண்டல பூஜை,  முதற்கால வேள்வி பூஜை, பூர்ணாகுதி நடக்கிறது. 18ம் தேதி காலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, மண்டல பூஜை, வேத பூஜை, இரண்டாம் கால வேள்வி, பூஜை நாடி சந்தனம், 9 மணிக்கு மேல் கலசம் வலம் வருதல், கும்பாபிஷேகம் அலங்கார பூஜை, தச தரிசனம், பிரசாதம் வழங்குதல், 10.30 மணிக்கு மேல் மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்டோ டிரைவர்கள் செய்து வருகின்றனர்.

× RELATED திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம்