கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பு சிறப்பு முகாம்

திருப்பூர், பிப்.15: திருப்பூரில், வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பில் இருந்து கோழிகளை காப்பாற்ற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த புறக்கடை கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பை தடுக்க அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மாதம் 2 வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தற்போது தொடங்கி வரும் 22ம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையால் சிறப்பு முகாம் மேற்கொள்ளப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும்  கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடப்படும்.
நடப்பாண்டு மாவட்டத்தில் மாவட்டத்தில் 1.4 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கோழி வளர்ப்போரும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

× RELATED இலவச மருத்துவ முகாம்