தபால் நிலைய செயல்பாடு மாணவர்களுக்கு களப்பயிற்சி

ஊட்டி, பிப். 15:ஊட்டியில் உள்ள தபால் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் நேரடியாக சென்று அறிந்து கொண்டனர்.

 பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு அறைகளிலேயே அமர வைத்து பாடங்களை கற்றுக் கொடுப்பதை விட, கள பயிற்சி மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஒரு சில பள்ளிகள் மட்டுமே இது போன்று கள பயிற்சிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள அகலார் குருகுலம் பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஊட்டி தலைமை தபால் அலுவலகத்திற்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.  அங்கு மாணவர்களுக்கு தபால் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த கள பயிற்சி  அளிக்கப்பட்டது. தபால் துறை அதிகாரிகள் உமாமகேஸ்வரி, சுஜாதா, சிவகுமார், சேகர் ஆகியோர் தபால் நிலைய செயல்பாடுகள் குறித்து மாணவ,மாணவிகளுக்கு விளக்கினர்.

Related Stories: