பிரன்ட்லைன் பள்ளியில் கராத்தே திறனாய்வு தேர்வு

திருப்பூர், பிப்.15: திருப்பூரில் இந்தியன் ஷிட்டோ கராத்தே பள்ளியின் சார்பில் தி பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளியில் கராத்தே தேர்வு நடந்தது. இதில், தி பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அகில இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் ரென்சி சத்பத் தகுதி பட்டைகளை வழங்கினார். பள்ளித் தாளாளர் சிவசாமி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் சென்சாய் ராஜேஸ்வரன், திருப்பூர் மாவட்ட தலைமை பயிற்சியாளர் பாலசந்தர், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

× RELATED உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்