நியூஸ்கீம் ரோட்டுக்கு காந்தி பெயர் வைக்க கோரிக்கை

பொள்ளாச்சி, பிப். 15: பொள்ளாச்சி நியூம்கீம் ரோட்டுக்கு காந்தி பெயர் வைக்க ெதாழில் வர்த்த சபையினர் ஆணையாளரிடம் கோரிக்கை மனு  அளித்தனர்

பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் கண்ணனிடம் நேற்று முன்தினம், தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், பொள்ளாச்சி கோவை ரோட்டின் ஒரு பகுதியில் கடந்த 1985ம் ஆண்டு காந்தி சிலை நிறுவப்பட்டது. காந்தி சிலை பகுதியிலிருந்து பல்லடம் ரோடு, உடுமலை ரோடு இணைக்கும் வகையில் நியூஸ்கீம் ரோடு அமைக்கப்பட்டது.
Advertising
Advertising

மத்திய பஸ் நிலையத்திலிருந்து வரும் உடுமலை, பழனி, பல்லடம் மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், நியூஸ்கீம் ரோடு வழியாகவே செல்கிறது. இதனால், இந்த வழித்தடம் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே, முக்கிய வழித்தடமாக உள்ள நியூஸ்கீம் ரோட்டிற்கு ‘மகாத்மா காந்தி ரோடு’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி, அந்த ரோட்டிற்கு பெயர் சூட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று  கூறப்பட்டுள்ளது.

Related Stories: