சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, பிப். 15: பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, கோட்ட தலைவர் அய்யாசாமி தலைமை தாங்கினார். இணை செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிகுணம், வட்ட கிளை தலைவர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ‘ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஊதிய பிடித்தம் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோஷம் எழுப்பினர்.

× RELATED திருச்சியில் தண்டோரா போட்டு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்