நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு மண்டல இன்ஸ்பெக்டர்கள் 59 பேர் பணியிட மாற்றம்

கோவை, பிப். 15: நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு கோவை மேற்கு மண்டலத்தில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிய 59 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் விவரம்: கோவை மாநகர் சரவணம்பட்டி சட்டம் ஒழுங்கு ராமசந்திரன், போத்தனூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோபி, அனைத்து மகளிர் காவல்நிலையம் தெற்கு மசுதா பேகம், வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு தேவேந்திரன், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஹேமா ஆகியோர் கோவை சரகத்திற்கும், உக்கடம் க்ரைம் பிரிவு பஞ்சலிங்கம் சேலம் சிட்டி, ராமநாதபுரம் க்ரைம் ராஜான் திருப்பூர் சிட்டி, சிங்காநல்லூர் க்ரைம் சரவணன் திருப்பூர் சிட்டி, காட்டூர் க்ரைம் சாந்தி சேலம் சிட்டி, அனைத்து மகளிர் காவல் சென்ட்ரல் விஜயகுமாரி சேலம் சிட்டி, போக்குவரத்து புலனாய்வு பிரிவு கிழக்கு வீரமணி திருப்பூர் சிட்டி, ரேஸ்கோர்ஸ் க்ரைம் மோகன்ராஜ், நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவு ராஜேஸ்வரி, பீளமேடு க்ரைம் அன்பரசு ஆகியோர் கோவை சரகத்திற்கும், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஷீலா திருப்பூர் சிட்டி, கோவை சிட்டி குண்டு வெடிப்பு தடுப்பு பிரிவு சங்கீதா திருப்பூர் சிட்டி, ஆர்எஸ்.புரம் க்ரைம் கலையரசி கோவை சரகம், திருப்பூர் சிட்டி வேலம்பாளையம் சண்முகம் கோவை சரகம், திருப்பூர் சிட்டி எஸ்சிஎஸ் சக்திவேல் கோவை சிட்டி, திருப்பூர் அனைத்து மகளிர் காவல் வடக்கு கலையரசி கோவை சகரத்திற்கும், சேலம் சிட்டி சிசிபி மாரிமுத்து, கிட்சிப்பாளையம் நாகராஜன், சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையம் பிரேமலாத ஆகியோர் கோவை சிட்டிக்கும், சேலம் டவுன் ரவிக்குமார், அம்மாபேட்டை சரோஜா ஆகியோர் கோவை சிட்டிக்கும், நீலகிரி கேத்தி விவேகானந்தன், நீலகிரி புடுமண்ட் சரசுமணி, காரமடை சக்திவேல், மசினக்குடி முரளிதரன், வடவள்ளி ரவி, ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையம் அமுதா ஆகியோர் கோவை சிட்டிக்கும், சேலம் சரகம் செல்வம், தர்மபுரி ஏரியூர் ஜெய்சங்கர், தர்மபுரி மறான்தகளி ஜாபர் உசைன் கோவை சிட்டிக்கும், கோவை போக்குவரத்து காவல் கிழக்கு சண்முகம் , டிராபிக் மேற்கு சதாசிவம், ஆயுதப்படை ரவிச்சந்தர் ஆகியோர் கோவை சரகத்திற்கும், ஈரோடு பவானி டிராபிக் கோவிந்தராஜ், ஈரோடு எம்.டி பாண்டியன், சேலம் ஆயுதப்படை உதயகுமார் ஆகியோர் கோவை சிட்டிக்கும் பணியிட மாற்றம் செய்து மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: