கோவையில் லாரி கண்டெய்னர் விழுந்து விபத்து

கோவை,பிப்.15: கோவை லங்காகார்னர் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று சரக்கு லாரியின் கண்டெய்னர் திடீரென கீழே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து டைல்ஸ் கற்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று ேநற்று காலை கற்களை இறக்கி விட்டு திரும்பி செல்லும் போது கோவை லங்காகார்னர் பகுதிக்கு வந்தது. அப்போது அங்குள்ள ரயில்வே தரை பாலத்தின் கீழ் லாரி செல்ல முயன்றபோது அங்கிருந்த தடுப்பு கம்பி மீது லாரியின் கண்டெய்னர் மோதியது. இதில் லாரியின் கண்டெய்னர் பெட்டி தனியாக கழன்று கீழே விழுந்தது. அதிருஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த கண்டெயர்னர் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், லாரியை ஓட்டி வந்த நவாஸ் (28) என்பவருக்கு கோவை நகரை பற்றி முழுமையாக தெரியாததால் லங்கா கார்னர் வந்து விபத்தில் லாரி சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நவாஸ் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

× RELATED கோவை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பலி