கோவை குண்டு வெடிப்பு தினம் தடையை மீறி ஊர்வலம் 150 பேர் கைது

கோவை, பிப்.15: கோவை குண்டு வெடிப்பு தினமான நேற்று தடையை மீறி ஊர்வலம் சென்ற 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் சார்பில் குண்டுவெடிப்பின் போது, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு போலீஸ் அனுமதி மறுத்திருந்தனர்.

இந்தநிலையில், தடையை மீறி அமைப்பின் இளைஞர் அணி மாநில தலைவர் சுபாஸ் தலைமையில் நேற்று சாஸ்திரி ரோட்டில் இருந்து டி.பி.ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர். ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 110 பேரை கைது செய்தனர்.

இதேபோல், இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் 40 பேர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சர்.சி.வி.சண்முகம் ரோடு வழியாக வந்தனர். இவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

குண்டு வெடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க கோவையில் நேற்று 650 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: