ரூ2 ஆயிரம் பெற பதிவு செய்யலாம்

உடுமலை, பிப். 15: தமிழக அரசின் அறிவிப்பு படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்  ரூ.2 ஆயிரம் உதவித்தொகை நேரில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சி ஆணையர் கூறி இருப்பதாவது:உடுமலை நகராட்சியில் வசிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருக்கும் 5354 குடும்பங்களுக்கு, தமிழக அரசின் அறிவிப்பு படி, ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு நகராட்சி பணியாளர்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது.பட்டியலில் உள்ளவர்கள் தங்களது வங்கி கணக்கு எண், தொலைபேசி எண், ஸ்மார்ட் ரேஷன் கார்டு எண் விவரங்களை வழங்க வேண்டும்.மேலும் வீடு வீடாக கணக்கிடும் பணியின்போது விடுபட்டவர்கள், தங்களது விவரங்களை நகராட்சியில் நாளை (இன்று) முதல் நேரடியாக

பதிவு செய்து பயன்பெறலாம்.
Advertising
Advertising

Related Stories: