×

மைதானத்தில் புதிய கட்டிட பணி முன்னாள் மாணவர்கள் போராட முடிவு

வால்பாறை, பிப்.15: வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடம் கட்ட பணிகளை நிறுத்த முன்னாள் மாணவர்கள்அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  
வால்பாறை நகரின் மையப்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இதில் 38 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். வால்பாறை பகுதியில் மிக தொன்மையான மற்றும் பல கால்பந்து வீரர்களை உருவாக்கிய பள்ளி என்ற பெருமை உண்டு.
இந்நிலையில் மாணவர்கள் பயன் படுத்திவரும் கால்பந்து மைதானத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக, தனியார் நடத்தும் விடுதிக்காக  கூடுதல் கட்டிடம் கட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி மைதானத்தை தேர்வு செய்துள்ளார்கள். இதுகுறித்து முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி  கூறுகையில், “வால்பாறை பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் விளையாட பயன்படுத்தும் மைதானத்தில் கட்டிடம் கட்ட செயல்பட்டது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம்’’ என்றனா்.  இதுதொடர்பாக திமுக மற்றும் மா.கம்யூ கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கட்டிட பணிகளை நிறுத்தவேண்டும் என மனு அனுப்பி உள்ளனர்.

Tags : grounds ,
× RELATED பிரதமர் மோடி வருகை எதிரொலி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை