×

திமுக., சார்பில் ராசாவிற்கு வரவேற்பு

ஊட்டி, பிப். 15: ஊட்டி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிற்கு சேரிங்கிராஸ் பகுதியில் நகர திமுக., சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். திமுக., தேர்தல் பணிக்குக்குழு செயலாளர் ராமசந்திரன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் மாலை அணிவித்து ராசாவை வரவேற்றனர். தொடர்ந்து, ராசாவிடம் பல்வேறு குறைகளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில், ஜெயகோபி, ரவீந்திரன், மகேஷ், கார்டன் கிருஷ்ணன், புஷ்பராஜ், சுபையர், ஹென்றி, மஞ்சுகுமார், சம்பத், நிக்கோலஸ், டிசோசா, தியாகு, பாபுராஜ், சுரேஷ், உமேஷ், ஸ்டீபன், கமலகண்ணன், அருள், பெரியசாமி, ஸ்டேன்லி, ரஞ்சித், சங்கர், குழந்தைநாதன், மகளிர் அணியை சேர்ந்த லூவிசா, டெய்சி, வனிதா, கண்ணகி, விஜயா, ரெஜினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Raja ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!