தனிநபர் பயன்பாட்டிற்கு சாலை அமைக்க எதிர்ப்பு

பந்தலூர், பிப்.15: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் தனிநபர் பயன்பாட்டிற்காக சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அருகே உள்ள கொட்டாடு முதல் கொத்தகொல்லி வரை சுமார் 500 மீட்டர் தூரம் ஆளுங்கட்சி பிரமுகர் பயன்பாட்டிற்காக நெலாக்கோட்டை  ஊராட்சி கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்கு அப்பகுதி மக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலை வசதி இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில் தனிநபர் ஒருவருக்கு சிமென்ட் சாலை அமைத்து தர கூடாது என்றனர்.

× RELATED சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை