ைஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலில் 19வது நாளாக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

திருவாரூர், பிப்.15:   திருவாரூர் அருகே திருக்காரவாசலில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று 19வதுநாளாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகன் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 திருவாரூர் மாவட்டம்  திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருக்காரவாசலில் கடந்த மாதம் 27ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் நேற்றும் 19வது நாளாக இந்த போராட்டமானது போராட்ட குழு பொறுப்பாளர்கள் தியாகராஜன், சுப்பையன், சரவணன் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.   இதில் பி.ஆர்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்ற கூட்டதொடரில்  இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தினை ரத்து செய்வது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு...