×

திருத்துறைப்பூண்டியில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் செயல்விளக்கம்

திருத்துறைப்பூண்டி, பிப்.15:  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பிறகு எந்த சின்னத்திற்கு  வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில்  வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் வேதை சாலையில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.  வாக்குப்பதிவு இயந்திரங்கள்  குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில்   வாக்களித்தவாக்காளர்கள் தான் அளித்த வாக்கு சரியான சின்னத்தில்  பதிவாகி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய  தொழில்நுட்பத்தை இந்தியதேர்தல் ஆணையம்
அறிமுகப்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி நகரில் வேதாரண்யம் சாலையில் உள்ள அரசு பள்ளியில் தாசில்தார் மகேக்ஷ்குமார் மேற்பார்வையில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேதநாயகம், துணை ஆணையர் சாமிநாதன், நகராட்சி வருவாய் ஆர்வர்டு  கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.  இதில் வாக்களித்த பின்னர் 7 விநாடிகளுக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர்  எந்த சின்னத்திற்கு வாக்களித்
தோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்  என வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...