முத்துப்பேட்டை அருகே 320 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசை கண்டதும் கும்பல் தப்பியோட்டம்

முத்துப்பேட்டை, பிப்:15  முத்துப்பேட்டை அருகே 320 லிட்டர் கள்ளச்சாரயம், 4 பேரல்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.
  முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு ராமன்கோட்டகம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பியோடியது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்த 320 லிட்டர் கள்ளச்சாராயம், காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 4 பேரல் மற்றும் தளவாட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

× RELATED கோவை நீதிமன்றம் அருகே 2 இளைஞர்களுக்கு...