அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 90 ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு

திருச்சி, பிப்.15:  திருச்சி மாநகரில் அதிக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள் 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி  மாநகரில் அதிக வாகன போக்குவரத்து நெருக்கம் காரணமாக ஏற்படும்  விபத்துக்களை தடுத்திடவும், ஆட்டோ மற்றும் வேன்களில் அதிக எண்ணிக்கையில்  பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை  எடுக்கவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி  நேற்றுமுன்தினம் திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து போலீசார் சார்பில்  மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மற்றும்  வேன் ஓட்டுநர்கள் 90 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  மேலும்  ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அதிக  எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் மீறினால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: