துணிப்பை தயாரிப்பு பயிற்சி திருச்சியில் ஒருவாரம் நடக்கிறது

திருச்சி, பிப்.15: திருச்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை தயாரிப்பு குறித்த ஒருவார பயிற்சி வருகிற 1ம்தேதி முதல் நடைபெறுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் செயலாளர் மல்லிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் மார்ச் 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பதிலி-துணிப்பை தயாரிப்பு ஒரு வார தையல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் உற்பத்தி பயிற்சிக்கான தொழில் வாய்ப்புகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து  துணிப்பை சார்ந்த பொருட்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து துணிப்பை உற்பத்தி செய்வது, மூலப்பொருட்கள் பெறுவது எப்படி? என்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி நான்கு பேட்ஜ்களாக வழங்கப்படுகிறது. கல்வி தகுதி, வயது வரம்பு இல்லை. ஆண்கள், பெண்கள், மாற்றுபாலினத்தவர் என அனைவரும் கலந்து கொள்ளலாம். காலை 9-11 மணி, பகல் 11-1மணி, மதியம் 2-4, மாலை 4-6 மணி வரை நான்கு குழுக்களாக நடைபெற உள்ளது.மேலும் விவரங்களுக்கு திருச்சி பாரதியார் சாலை, செயின்ட் பால்ஸ் காம்ப்ளக்சில் இயங்கி வரும் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தை நேரிலும், 9488785806 மற்றும் 9944421117 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: