வாக்குப் பதிவு இயந்திரம் செயல் விளக்க முகாம்

தா.பேட்டை, பிப்.15:  தா.பேட்டை  அடுத்த ஆராய்ச்சி கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம்  பொதுமக்கள் மத்தியில் வருவாய்துறை சார்பில் செய்து காண்பிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருவாய் துறையினரும், தேர்தல்  அலுவலர்களும் அதற்குரிய பணிகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில்  வாக்குப் பதிவின் போது வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம்  என்பதனை அறிந்து கொள்ளும் வகையில் விவி பாட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  இதன்மூலம் வாக்களித்தவுடன் வாக்குப் பதிவை எவ்வாறு அறிந்து கொள்வது என்பது குறித்து  பொதுமக்கள் மத்தியில் செயல் விளக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. தேர்தல் துணை தாசில்தார்  கோவிந்தராஜ், ஒன்றிய அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் துறையினர் செயல்  விளக்கம் அளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: