தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.15: தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருச்சி புறநகர் கிளை முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து புறநகர் கிளை முன்பு திருச்சி மண்டலம் சார்பில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டமைப்பின் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், இது நாள் வரை வழங்கபபட்டு வந்த கூடுதல் கி.மீட்டருக்கான பேட்டாவை ரத்து செய்தது மற்றும் இயக்க தூரத்தினை அதிகப்படுத்துவது ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பி, பேசினர். இதில் எல்பிஎப் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, சிஐடியூ பொதுச்செயலாளர் சீனிவாசன், ஏஐடியூசி, ஹெச்எம்எஸ் , டிடிஎஸ்எப் , ஏஏஎல்எப், எம்.எல்.எப், ஐஎன்டியூசி, டிஎம்டிஎஸ்பி, பிடிஎஸ் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: