நிர்வாக காரணங்களுக்காக தஞ்சை, காரைக்கால் பயணிகள் ரயில்கள் மார்ச் 31ம் தேதி வரை ரத்து

திருச்சி, பிப்.15:தெற்கு ரயில்வே சார்பில் நிர்வாக காரணங்களுக்காக நான்கு வழித்தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களை முழுமையாகவும், பாதியாகவும் ரத்து செய்துள்ளது. அதன்படி திருச்சி-தஞ்சை-திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் எண்.76820 மற்றும் எண்.76823 ஆகிய இரண்டு ரயில்கள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் திருச்சி-காரைக்கால்-திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள்  எண்.76854 மற்றும் எண்.76853 ஆகிய இரண்டு ரயில்கள் வருகிற 20ம் தேதி முதல் மார்ச் 31ம்  தேதி வரையும், காரைக்குடி-பட்டுக்கோட்டை- காரைக்குடிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள்  எண்.06856 மற்றும் எண்.06855 ஆகிய இரண்டு ரயில்கள் இன்று முதல் மார்ச் 31ம்  தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  மேலும் திருநெல்வேலி-மயிலாடுதுறை-திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் எண்.56822 மற்றும் எண்.56821 ஆகிய இரண்டு ரயில்கள் மயிலாடுதுறை-திருச்சி-மயிலாடுதுறை இடையே இன்று முதல் வருகிற மார்ச் 31ம்  தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: