வழிபாட்டுதலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற கோரிக்கை

திருச்சி, பிப்.15: திருச்சி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் நீதிமன்ற உத்தரவின்படி கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முதியோர் மற்றும் குழந்தைகள் நலன் கருதி, பொது இடங்களில் மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதி வழிபாட்டு தலங்களில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என சென்ற ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டதை கடைபிடிக்க வேண்டும் எனறும், திருச்சி மாவட்ட உள்ள அனைத்து கோவில், சர்ச், மசூதி பொறுப்பாளர்களை அழைத்து கூம்பு வடிவ குழாய் ஒலி பெருக்கி பயன்படுத்தும் அனைவரும் நீதிமன்ற உத்தரவுபடி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனுவில் தெரிவித்துள்ளனர்.

× RELATED பிரதோஷ வழிபாடு