செய்துங்கநல்லூர் அருகே அரசு பஸ், கார் மோதி விவசாயி படுகாயம்

செய்துங்கநல்லூர், பிப். 15:  செய்துங்கநல்லூர் அருகே அரசு பஸ் - கார் நேருக்கு நேர் மோதியதால் விவசாயி படுகாயம் அடைந்தார்.   சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி (45).  விவசாயியான இவர் கருங்குளத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு காரில்  ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். செய்துங்கநல்லூர் அருகே வந்தபோது உடன்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ்மீது இவரது  கார் மீது மோதியது. இதில்  இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மாடசாமியை செய்துங்கநல்லூர் எஸ்ஐ ராஜாராம், சதீஷ்  மற்றும் போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விரைந்துவந்து போக்குவரத்தை சீரமைத்த போலீசார், அரசு பஸ் டிரைவரான தென்காசியை சேர்ந்த  இசக்கி மகன் சொக்கலிங்கம்  மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: