சாலை விபத்தில் முதியவர் பலி

சாத்தான்குளம், பிப். 15:  சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி காயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (65). தொழிலாளியான இவர், கடந்த 10ம்தேதி சாத்தான்குளத்திற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.  இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் முருகன்(47) அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: