உடன்குடி ஒன்றிய பகுதிகளில் திமுக கிராமசபை கூட்டம்

உடன்குடி, பிப். 15: உடன்குடி ஒன்றிய பகுதிகளில் திமுக சார்பில் கிராமசபை சிறப்பு  கூட்டங்கள் நடந்தன. இதில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார்

சீர்காட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பாலசிங் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வசீகரன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிராஜா, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, இலக்கிய அணி மாவட்ட  துணை அமைப்பாளர் ரஞ்சன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவபிரகாஷ், முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

 கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை  நடத்தாமல் அதிமுக அரசு தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அடிப்படை தேவையான தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதிகளை முறையாக  நிறைவேற்றாத நிலையில் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இதே போல் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்.  வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவளிக்க வேண்டும்’’  என்றார்.

 தொடர்ந்து நயினார்பத்த்து ஊராட்சி சார்பில் அம்மன்புரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டதோடு கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். முன்னதாக, ஊராட்சி செயலாளர் ரவிந்திரன் வரவேற்றார். கூட்டங்களில் மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, உடன்குடி நகரச் செயலாளர் ஜாண்பாஸ்கர், ஒன்றிய துணைச் செயலாளர் மதன்ராஜ், நகர பொருளாளர் தங்கம், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் முகமது சலீம், மகபூப், தொண்டர் அணி பிரபாகர், சந்தையடியூர் கார்த்தீசன்,  இளைஞர் அணி நகரச் செயலாளர் அஜய், தொழிலதிபர் கிருஷ்ண குமார், ராமஜெயம், செந்தில், பால்சாமி, சேசவன், சிவமுருகன், ராகவன், லிங்கநாதன், தங்கராஜா, பால்ராஜ், வக்கீல் அணி கிருபாகரன்  மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: