சாலைகளை சீரமைக்க கோரி ஏரலில் பாஜ ஆர்ப்பாட்டம்

ஏரல், பிப். 15:   ஏரல் பகுதிகளில் மிக மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய வணிக நகரமான ஏரலுக்கு தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஏரலில் இருந்து முக்காணி செல்லும் சாலை, ஏரல்-ஆறுமுகமங்கலம் சாலை, ஏரல்-சேதுசுப்பிரமணியபுரம் சாலை உட்பட அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், காலம் தாமதிக்காமல் உடன் போட வலியுறுத்தி பாஜ சார்பில் ஏரலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் ராஜா, மாவட்ட செயலாளர் வீரமணி, பிரசார பிரிவு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், மாவட்ட வர்த்தக பிரிவு இணை செயலாளர் சத்தியசீலன், மாவட்ட விவசாய பிரிவு பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் முத்துமாலை, ஒன்றிய பொறுப்பாளர்கள் சுரேஷ், பெருமாள், செந்தில், ஏரல் நகர தலைவர் பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், அருணாசலம், மீனாட்சி சுந்தரம், அர்ஜுன் பாலாஜி, சிவா உட்பட பலர் பங்ேகற்றனர்.

Related Stories: